×

குரு ரவிதாஸ் ஜெயந்தி!: டெல்லி கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்..பஜனையில் இசைக்கருவியை இசைத்து வழிபாடு..!!

டெல்லி: சீக்கிய மதகுருவான ரவிதாஸ் ஜெயந்தியை ஒட்டி டெல்லியில் உள்ள அவரது கோயிலில் வழிபாடு நடத்திய பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்களுடன் இணைந்து இசை கருவியை இசைத்து தரிசனம் செய்தார். ஆன்மிகவாதி, கவிஞர், சமூக சீர்திருத்தவாதி, ஆன்மிக குரு என  பன்முகங்கள் கொண்ட குரு ரவிதாஸின் 645வது பிறந்தநாளை ஒட்டி, ரவிதாஸ் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு டெல்லி கரோல்பாகில் உள்ள குரு ரவிதாஸ் விஸ்ரம் தாம் மந்திரில் பிரதமர் நரேந்திர மோடி தரிசனம் செய்தார். குரு ரவிதாஸ் திருவுருவச் சிலைக்கு அவர் தீப ஆராதனை காட்டி பூஜைகள் செய்தார். பின்னர் அங்கு நடைபெற்ற ஷவாப் கிர்தான் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், அங்கிருந்த சீக்கியர்களுடன் இணைந்து இசைக்கருவி இசைத்து பாடல்கள் பாடி தரிசனம் மேற்கொண்டார். பிரதமர் மோடி தனது தலையில் துணி ஒன்றையும் கட்டியிருந்தார். ரவிதாஸ் ஏற்படுத்திய ரவிதாஸியா என்ற பக்தி மார்க்கத்தை  பின்பற்றுவோர் இவ்வகை துணியை தலையில் அணிவதுண்டு. இன்று ரவிதாஸ் கோயிலுக்கு வந்த அவர் ரவிதாஸியா மார்க்கத்தைப் பின்பற்றுவோருடன் ஒன்றுபட்டு நிற்கும் அடையாளமாக தனது தலையில் அந்த துண்டை கட்டி வந்தார். கோயிலில் இருந்து செல்லும்போது அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில், குரு ரவிதாஸின் வாழ்க்கை மற்றவர்களுக்கு ஓர் ஊக்கம் என்று பதிவிட்டார்….

The post குரு ரவிதாஸ் ஜெயந்தி!: டெல்லி கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்..பஜனையில் இசைக்கருவியை இசைத்து வழிபாடு..!! appeared first on Dinakaran.

Tags : Guru Ravidas Jayanti ,PM Modi ,Delhi Temple ,Delhi ,Narendra Modi ,Ravidas Jayanti ,Bajan ,
× RELATED எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை...