×

ஆஸ்கருக்கு செல்லும் விக்ரமின் “தங்கலான்”

நடிகர் விக்ரம் ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதைக்களத்துடன், வித்தியாசமான கெட்டப்களில் நடித்து வருகிறார். பிதாமகன், அந்நியன், கந்தசாமி, தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்களில் மிகவும் வித்தியாசமான தோற்றங்களில் உடலை வருத்திக்கொண்டு நடித்திருப்பார்.

இந்நிலையில் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் “தங்கலான்” திரைப்படம் விக்ரமின் திரையுலக வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் ஒரு பீரியட் படமாக உருவாகிவருகிறது.

கோலார் தங்க வயலில் பணியாற்றிய தொழிலாளர்களின் வாழ்க்கையையும் அதிகார வர்க்கத்துக்கு எதிரான அவர்களின் மோதலையும் மையமாக வைத்து இந்த படம் உருவாகிவருகிறது. இதில் விக்ரம் பண்டைய கால மனிதரை போன்று மிகவும் வித்தியாசமாக நடிக்கும் தோற்றம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.

“தங்கலான்” படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு இன்னும் 10 நாட்கள் மட்டுமே பாக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் “தங்கலான்” படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் படக்குழு அறிவித்து உள்ளது.

The post ஆஸ்கருக்கு செல்லும் விக்ரமின் “தங்கலான்” appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vikramin ,Oscars ,Vikram ,Kandasami ,Pa. Vikram ,Ranjith ,Thangalan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED எப்பவுமே எனக்கு ஒரு வருத்தம்! | Chiyaan Vikram speech at Thangalaan Success Meet #shorts