×

டாஸ்மாக் கடைகள் திறக்க மக்கள் எதிர்த்தால் கலெக்டர்கள் பரிசீலிக்க அனுமதி : ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை:டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்று கிராம பஞ்சாயத்துகள், கிராம சபைகள் தீர்மானம் நிறைவேற்றினால் அதை செயல்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றம், இரு வேறு உத்தரவுகளை பிறப்பித்ததால், வழக்கு மூன்று நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்குகள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, டாஸ்மாக் விதிகளில் திருத்தம் கொண்டுவருவது பற்றி அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என மூன்று நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி கார்த்திகேயன், நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு  நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், டாஸ்மாக் கடைகளை மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாக பரிசீலிக்கும்  வகையில் மதுபான சில்லறை விற்பனை விதிகளில்  திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறி, திருத்த விதிகளை தாக்கல் செய்தார். அதில், ஆட்சேபங்களை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்காமல் எந்த கடைகளையும்  திறக்க அனுமதிக்க கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்களின் முடிவை எதிர்த்து 30 நாட்களுக்குள் மதுவிலக்கு ஆயத்தீர்வை ஆணையருக்கு மேல் முறையீடு செய்யவும் திருத்த விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்குகளை மீண்டும் சம்பந்தப்பட்ட அமர்வுகளுக்கு மாற்றி,  முழு அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்ட வழக்கை முடித்து வைத்தனர். …

The post டாஸ்மாக் கடைகள் திறக்க மக்கள் எதிர்த்தால் கலெக்டர்கள் பரிசீலிக்க அனுமதி : ஐகோர்ட்டில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Chennai ,
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்