×

‘ஓட்டு போடுங்க தாயி’…-வேட்பாளர் ‘யோவ் ஒன்னது அடுத்த வார்டுயா’…-பொதுமக்கள்: இது பழநி பரிதாபம்

பழநி:தமிழகத்தில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. பிரதான கட்சிகள் மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்களும் ஏராளமானோர் களமிறங்கி உள்ளனர். பிரசாரத்திற்கு 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து தரப்பினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், பழநி பகுதியில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் கடந்த அதிமுக ஆட்சியின்போது நடந்த வார்டு மறுவரையில் பல்வேறு குளறுபடிகள் அரங்கேறின.ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் வாக்குகள் பல வார்டுகளுக்கு பிரிக்கப்பட்டன. இதனால் கவுன்சிலர் பதவிகளுக்கு களமிறங்கி இருக்கும் புதுமுக வேட்பாளர்கள் கடும் அவஸ்தைக்குள்ளாகி உள்ளனர். இவர்களுக்கு பலரது வாக்குகள் எங்கு இருக்கிறது என்ற தெரியாமலேயே வாக்கு இல்லாத நபர்களிடமும் அம்மா… ஐயா.. ஓட்டு போடுங்க.. என காலில் விழுந்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அப்போது, அடுத்த வார்டுல போய் கேளுங்க..ன்னு விவரம் அறிந்தவர்கள் கூற, இதுவேற இருக்கான்னு புதுமுகங்கள் திணறிப்போறாங்களாம். பலமுறை போட்டியிட்டவர்கள் ஓரளவு தெளிவடைந்து வாக்காளர்களை கண்டறிந்து கொண்ட நிலையில், புதுமுக வேட்பாளர்கள் தனக்கான வாக்காளர்கள் எங்கு உள்ளனர் என தெரியாமலேயே அடுத்த வார்டை சேர்ந்தவர்களிடம் வாக்கு கேட்டு அலைந்து திரிவது பழநி பகுதியில் அதிகரித்துள்ளது….

The post ‘ஓட்டு போடுங்க தாயி’…-வேட்பாளர் ‘யோவ் ஒன்னது அடுத்த வார்டுயா’…-பொதுமக்கள்: இது பழநி பரிதாபம் appeared first on Dinakaran.

Tags : Mother to drive ,Yow ,Urban Local Elections for ,Tamil Nadu ,Pity ,
× RELATED யாருமே கண்டு கொள்ளாததால் விரக்தி கோயில் கோயிலாக சுற்றும் ஓபிஎஸ்