×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் மாநகராட்சி, குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகள், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி வேட்பாளர்கள் முன்னிலையில் நடந்து வருகிறது. இதில், வாக்குப்பதிவு செய்யும் வாக்காளர்கள், 13 வகையான ஆவணங்களை காட்டி வாக்களிக்கலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.இந்நிலையில், மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில், கடந்த சில நாட்களாக வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் வாக்குப்பதிவு செய்ய வேண்டிய இடம், நேரம், வாக்காளர் வரிசை எண் ஆகிய விவரங்கள் உள்ளன. இதனால் வாக்காளர் அடையாளம் காண்பது அனைவருக்கும் எளிதாக இருக்கும். வாக்காளர் பட்டியல் துணை கொண்டு பூத் ஸ்லிப் வழங்கி, அவர்களிடம் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர். …

The post காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram District ,Bhooth Silip ,Kanchipuram ,Kanchipuram Municipal Corporation ,Dinakaran ,
× RELATED பொது தேர்வுகளில் நல்ல தேர்ச்சி...