×

சின்னமனூர் அருகே 3 ஆண்டாக பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி

*அதிமுக ஆட்சியில் தரமற்று கட்டியதாக புகார்சின்னமனூர் : சின்னமனூர் அருகே, கட்டுமானப் பணி முடிந்து 3 ஆண்டாகியும், குடிநீர் தொட்டி பயன்பாடில்லாமல் உள்ளது. அதிமுக ஆட்சியில் தரமற்று கட்டியதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சின்னமனூர் அருகே, அய்யம்பட்டி கிராமத்தில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, மார்க்கையன்கோட்டை முல்லைப்பெரியாற்றில் உறைகிணறு அமைத்து, அங்கிருந்து தண்ணீர் எடுத்து குடிநீர் விநியோகம் செய்கின்றனர். இந்நிலையில், குடிநீர் விநியோகம் பற்றாக்குறையால், கிராமத்தில் குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையேற்று கடந்த 2018-19ல் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதியின் கீழ், ரூ.15 லட்சத்தை போடி எம்.எல்.ஏ ஓ.பன்னீர்செல்வம் ஒதுக்கீடு செய்து கொடுத்தார். இதையடுத்து ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை தொட்டி ஊராட்சி அலுவலகம் மேற்குப் பகுதியில் கட்டி முடித்தனர். ஆனால், தரமற்ற கட்டுமானம் என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.இதனிடையே, தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன், குடிநீர் தொட்டியை ஆய்வு செய்து, சீரமைக்க சம்மந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை விடுத்தார். இருப்பினும் அதிகாரிகளின் மெத்தனத்தால், குடிநீர் தொட்டி இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post சின்னமனூர் அருகே 3 ஆண்டாக பயன்பாட்டுக்கு வராத குடிநீர் தொட்டி appeared first on Dinakaran.

Tags : Chinnamanur ,Cinnamanur ,ADMK government ,Dinakaran ,
× RELATED கால்வாய் தூர்வாரும் பணி ஜரூர்