×

ஹீரோவாக அறிமுகமாகும் ஹெல்த் இன்ஸ்பெக்டர்

 

சென்னை: உத்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம், ‘வில் வித்தை’. இதில் அருண் மைக்கேல் டேனியல், ஆராத்யா, ஜானகி, வைஷ்ணவி, குணா, எஸ்.எம்.டி.கருணாநிதி, கெழுவை சுரேஷ் குமார் நடித்துள்ளனர். சிவகுமார் கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஜே.அலி மிர்சாக் இசை அமைத்துள்ளார். குவைத் தமிழ் எழுத்தாளர் வித்யாசாகர் ஒரு பாடல் எழுதியுள்ளார். ஆர்.உஷா, அருண் மைக்கேல் டேனியல் இணை தயாரிப்பு செய்துள்ளனர். இப்படம் குறித்து இயக்குனர் செ.ஹரி உத்ரா கூறுகையில், ‘இதற்கு முன்பு ‘தெரு நாய்கள்’, ‘படித்தவுடன் கிழித்து விடவும்’, ‘கல்தா’ படங்களை இயக்கிய நான், இப்போது உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில், சைக்கோ திரில்லர் கதையுடன் ‘வில் வித்தை’ படத்தை இயக்கியுள்ளேன். இதில், ஹெல்த் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றிய அருண் மைக்கேல் டேனியல், கலையார்வம் காரணமாக அந்தப்பணியை ராஜினாமா செய்துவிட்டு, 2 புதிய பரிணாமங்களில் சிறப்பாக நடித்துள்ளார். மன்னார்குடி, தஞ்சாவூர், கும்பகோணம், ராமநாதபுரம், பரமக்குடி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. வரும் ஜூலை 7ம் தேதி வெளியாகும் இப்படத்தின் திரையரங்குக்கான உரிமையை முகில் படைப்பகம் வாங்கியுள்ளது’ என்றார்.

The post ஹீரோவாக அறிமுகமாகும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Udra Productions ,Will Seday ,Arun Michael Daniel ,Arathya ,Janaki ,Vaishnavi ,Guna ,S. MM TD ,Karunaniti ,Khughua Suresh Kumar ,Suresh Kumar ,Sivamar Ganesh ,Cinematry ,A.A. JJ Ali Mirzak ,Kuwait ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...