×

டெபாசிட் வசூலித்து ஊர்வலங்களுக்கு அனுமதி: டிஜிபிக்கு ஐகோர்ட் கிளை பரிந்துரை

மதுரை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலைச் சேர்ந்த ஆறுமுகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோயில் முன்பகுதியிலும், தேரடி வீதியிலும் அருளானந்தர் தேவாலய சப்பரத்தை கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது என போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஏற்கனவே நடந்த சப்பர பவனியின் போது பட்டாசு வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், இருதரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் அமைதிப் பேச்சுவார்த்தையில் விதிக்கப்படும் நிபந்தனைகளை ஏற்காவிட்டால் சப்பரம் பவனி செல்ல போலீசார் அனுமதிக்கக் கூடாது. இதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பந்தப்பட்டோர் டெபாசிட் செய்ய வேண்டும். இதேபோல், தமிழகத்தில் அரசியல் கட்சியினர், மதம் மற்றும் சமூகம் சார்ந்த அமைப்பினர் மற்றும் சங்கத்தினர் ஊர்வலம் செல்ல அனுமதி கோரும்போது, அவர்களால் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் எந்தவிதமான பிரச்னையும் வராது என்ற உத்தரவாதத்தை பெற்ற பிறகு அனுமதி வழங்க வேண்டும். அனுமதி வழங்கும்போதே அவர்களால் ஏற்படும் பாதிப்பிற்கு ஏற்ப இழப்பீட்டை வசூலித்திடும் வகையில், ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களிடம் இருந்து டெபாசிட்டாக வசூலிக்க வேண்டுமென தமிழக அரசு மற்றும் டிஜிபி ஆகியோருக்கு பரிந்துரைத்து உத்தரவிட்டுள்ளார்….

The post டெபாசிட் வசூலித்து ஊர்வலங்களுக்கு அனுமதி: டிஜிபிக்கு ஐகோர்ட் கிளை பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : ICourt ,DGP ,Madurai ,Arumugam ,Kalaiyarkovil, Sivagangai district ,Sornakaliswarar temple ,Kalaiyarkoil ,Dinakaran ,
× RELATED விவாகரத்து வழக்குகளில் விசாரணையை...