×

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட சேலம் திமுக எம்பி மீதான அவதூறு வழக்கு ரத்து: ஐகோர்ட்உத்தரவு

சென்னை: கடந்த 2019ம் ஆண்டு சேலம் ஐந்து சாலையில் நடந்த கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி., பார்த்திபன், கமிஷனுக்காக பாலங்கள் கட்டுவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்திருந்தார். இது, முதல்வரின் அலுவல் பணியை குறிப்பிடும் வகையிலும், முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் இருப்பதாக கூறி பார்த்திபனுக்கு எதிராக, சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பார்த்திபன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், பார்த்திபன் சார்பில் தாக்கல் செய்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் வழக்கை திரும்ப பெற்றதற்கான அரசாணை தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, திமுக எம்.பி.யின் பேச்சு, அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் தான் உள்ளது. முன்னாள் முதல்வரின் அலுவல் ரீதியான பணியை விமர்சிக்கும் வகையில் இல்லை என்று கூறி அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்….

The post அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட சேலம் திமுக எம்பி மீதான அவதூறு வழக்கு ரத்து: ஐகோர்ட்உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Salem Dishagam ,Intakshagam ,iCordorder ,Chennai ,Salem Five Road ,Dzhagam M. Bridges ,GP ,Parthipan ,Supreme Court ,
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...