சென்னை: கமல்ஹாசன் இப்போது ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ள நிலையில் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் தற்போது அவர் ’புரொஜெக்ட் கே’ படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்துகொள்ள உள்ளார். அதுமட்டுமின்றி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அவர் டிவி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள இருப்பதாக தெரிகிறது. இதனால் கமல்ஹாசன் – வினோத் படம் காலதாமதம் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஏற்கனவே தனுஷிடம் கதை கூறி அந்த படத்தை உறுதி செய்திருந்த வினோத், தற்போது தனுஷும் பிஸியாக இருப்பதால் யோகி பாபுவிடம் கதை சொல்லி உள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பை உடனடியாக அவர் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post கமல் – வினோத் படம் தள்ளிப்போகிறது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.