×

அடையாளம் தெரியாத சாமியாரை கேட்டு முடிவுகள்; தேசிய பங்கு சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் மீது புகார்: சித்ராவுக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்து செபி உத்தரவு

டெல்லி: அடையாளம் தெரியாத சாமியார் ஒருவரின் ஆலோசனைப்படி தேசிய பங்கு சந்தையின் முக்கிய முடிவுகளை NSE-யின் நிர்வாக இயக்குனர் சித்ரா ராமகிருஷ்ணா மேற்கொண்ட அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. NSE எனப்படும் தேசிய பங்கு சந்தை நிறுவனர்களில் ஒருவராகவும், நிர்வாக இயக்குனராகவும் இருந்தவர் சித்ரா ராமகிருஷ்ணா. இவர் NSE -யின் நிர்வாக இயக்குனராக இருந்த 2013 முதல் 2016-ம் ஆண்டு வரையிலான நடவடிக்கைகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து பங்கு வர்த்தனை வாரியமான செபி விசாரணை மேற்கொண்டது. இதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. பங்கு சந்தையின் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை அடையாளம் தெரியாத சாமியாரின் ஆலோசனைப்படி சித்ரா ராமகிருஷ்ணா எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. இமயமலையில் இருப்பதாக கூறப்படும் அந்த சாமியாரின் ரிக், யஜூர், சாம என்ற 3 வேதங்களின் பெயரில் அமைந்துள்ள இ-மெயில் கணக்கிற்கு பங்குச்சந்தை நிர்வாகம் தொடர்பான தகவல்களை அனுப்பி வந்துள்ளார். அதே மெயில் கணக்கில் இருந்து ஆலோசனை கிடைத்த பின் அதன்படி முடிவுகள் எடுத்து வந்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது. சாமியாரின் வழிகாட்டுதல் படி 2013-ம் ஆண்டின் NSE ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஆனந்த் சுப்பிரமணியனுக்கு அடுத்தடுத்து 3 சம்பள உயர்வு அளித்து 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியதாகவும் செபி குற்றம் சாட்டியது. இதை தொடர்ந்து சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும், ஆனந்த் சுப்பிரமணியனுக்கு ரூ.2 கோடியும் அபராதம் விதித்துள்ள செபி, இரு வரும் 3 ஆண்டுகளுக்கு பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபட தடை விதித்துள்ளது. …

The post அடையாளம் தெரியாத சாமியாரை கேட்டு முடிவுகள்; தேசிய பங்கு சந்தை முன்னாள் நிர்வாக இயக்குனர் மீது புகார்: சித்ராவுக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்து செபி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Samyar ,Sebi ,Chitra ,Delhi ,Managing Director ,NSEE ,Managing ,National Stock Market ,Dinakaran ,
× RELATED பங்குச்சந்தை முறைகேடு: அதானி குழுமத்துக்கு செபி நோட்டீஸ்