×

காதலர் தினத்தை கொண்டாட தயாராகும் சுற்றுலாத் தலங்கள்

குன்னூர்: உலகம் முழுவதும் காதலர் தினம் பிப்ரவரி 14ம்தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் மலர்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லேட் மற்றும் பரிசு பொருட்களை தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசளித்து மகிழ்வார்கள். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டி, குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு காதலர் தினத்தன்று காதலர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். மேலும் புதிதாக திருமணமான தம்பதிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து தங்களது அன்பை பரிமாறிக் கொள்வார்கள். குன்னூர் சிம்ஸ் பூங்கா,டால்பின் நோஸ்,காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் காதலர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மலர்கள் மற்றும் கொய்மலர்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.காதலர் தினத்தையொட்டி குன்னூரில் உள்ள மலர் விற்பனையகங்களில் ரோஜா பூக்கள், கார்னேசன், லில்லியம், ப்ளூடைசி, ஜெர்புரா, ஆர்கிட் மலர்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு ரோஜா பூ ஒன்று ரூ.25க்கு விற்பனை செய்யப்படுகிறது.பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரோஜாக்கள் விற்பனைக்கு வந்துள்ளது. காதலர் தினத்தன்று மனம் கவர்ந்தவர்களுக்கு ரோஜாப்பூ மற்றும் விதவிதமான பரிசுகளை கொடுத்து தங்களது அன்பையும், காதலையும் வெளிப்படுத்துவார்கள். காதலர் தினத்தை கொண்டாட வெளிமாநில சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்….

The post காதலர் தினத்தை கொண்டாட தயாராகும் சுற்றுலாத் தலங்கள் appeared first on Dinakaran.

Tags : Valentine's Day ,Gunnur ,Dinakaran ,
× RELATED கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்...