×

நட்சத்திர ஓட்டலில் தயாரிப்பாளரை தாக்கிய நடிகர்: பாலிவுட்டில் பரபரப்பு

மும்பை: இந்தி நடிகர் ஆதித்யா பன்சோலி, இவரது மகன் சூரஜ் பன்சோலி. சூரஜ் நடிக்கும் ஒரு இந்தி படத்தை சாம் பெர்னாண்டஸ் தயாரித்து வருகிறார். இந்த பட விவகாரம் தொடர்பாக பேச, ஆதித்யாவும் சாம் பெர்னாண்டஸும் மும்பையிலுள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் சந்தித்தனர். அப்போது சாம் பெர்னாண்டஸை ஆதித்யா சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சாம் பெர்னாண்டஸ், நிலைகுலைந்து கீழே விழுந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஜுஹு காவல் நிலையத்தில் சாம், புகார் ஒன்றை அளித்தார். அதில், ‘சூரஜ் பன்சோலியை வைத்து ஒரு படம் தயாரித்து வருகிறேன்.  கொரோனா பாதிப்பு காரணமாக, என்னால் படத்தை முடிக்க பணம் திரட்ட முடியவில்லை. இதுபற்றி ஆதித்யாவிடம் சொன்னபோது, அவர் என்னை தரக்குறைவாக பேசினார். பிறகு என்னை தாக்கினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். இந்நிலையில் ஆதித்யாவும் சாமுக்கு எதிராக போலீசில் புகார் அளித்துள்ளார். சாம் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் புகாரில் கூறியுள்ளார்….

The post நட்சத்திர ஓட்டலில் தயாரிப்பாளரை தாக்கிய நடிகர்: பாலிவுட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Bollywood ,Mumbai ,Aditya Bansoli ,Suraj Bansoli ,Sooraj ,Sam ,
× RELATED நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே...