×

பள்ளிக்கூடத்திற்குள் ஹிஜாப் அணிவது தவறு என்றால் காவி துண்டு, நீல துண்டு அணிந்து வருவதும் தவறுதான்: நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி

சென்னை: சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அளித்த பேட்டி:ஹிஜாப் அணிவது, அணிய கூடாது என்பது அவர்களின் தனிப்பட்ட உரிமை. என்னை பொறுத்தவரை பள்ளிக்கூடத்திற்கு போகும் போது, யூனிபார்ம் என்று ஒன்று உள்ளது. நீங்கள் அணிந்து போங்கள், கேட்டு வரைக்கும் போடுங்கள். பள்ளிக்கூடத்திற்குள் போகும் போது, நாம எந்த சாதியும், எந்த மதத்தையும் உள்ளே கொண்டு போகாமல், பள்ளிக்கூடங்களில் விதிமுறைகளின்படி யூனிபார்ம் அணிந்து உள்ளே போகணும். அது மட்டும்தான் நான் சொல்வேன். என் பசங்கள் பள்ளிக்கூடங்களில் படிக்கும் போது, முஸ்லிம் ப்ரண்ட் இருந்து இருக்கிறார்கள். நானும் இஸ்லாமியர் சமுதாயத்தை சேர்ந்தவர். ஹிஜாப் அணிந்து ஸ்கூலுக்கு போனதே கிடையாது. மற்ற நண்பர்கள் அணிந்து வந்ததே கிடையாது. பள்ளிக்கூடம் வரை வருவோம். பள்ளிக்கூடத்திற்கு உள்ளே போகும் போது யூனிபார்மில் தான் போவோம். இதை தான் நாங்கள் எதிர்க்கட்சிக்காரர்களிடம் கேட்கிறோம். எதிர்க்கட்சிகள் எதற்கு இதற்கு பிரச்னை பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். குழந்தைகள் மனதில் ஏன் சாதி, மதம் கொண்டாடி கொண்டு இருக்கிறீர்கள். நாங்கள் பெங்களூருவில் சொன்னது என்ன?. பள்ளிக்கூடத்திற்கு உள்ளே செல்லும் போது, ஹிஜாப் அணிந்து வராதீர்கள் என்றுதான் சொல்கிறோம். பள்ளிக்கூடத்திற்கே வராதீர்கள் என்று சொல்கிறோமா? அப்படி கிடையாது. காவித்துண்டு அணிந்து யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஹிஜாப் அணிந்து தான் பள்ளிக்கூடத்திற்கு வருவோம் என்று அடம் பிடிக்கும் போது தான், சில குழந்தைகள் காவி துண்டு போட்டு கிட்டு போய் இருக்கிறார்கள். இரண்டுமே தப்பு. தேசிய கொடி கம்பத்தில் தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடியை ஏற்றவில்லை. காவி கொடி ஏற்றியது எம்டி போல்தான். எம்டி போலிலும் ஏற்றுவது தவறு தான். யாரும் அதை சரி என்று சொல்லவில்லையே. பள்ளிக்கூடத்திற்கு ஹிஜாப் போட்டு போவது தப்பு என்றால், காவித்துண்டு, ப்ளு துண்டு போட்டு விட்டு போவதும் தப்புதான். பள்ளிக்கூடத்திற்கு போகும் போது யாராவது யூனிபார்ம் இல்லாமல் போனீர்களா ஏன்று நான் கேட்கிறேன். ஒவ்வொரு பள்ளியிலும் ஏன் யூனிபார்ம் கொடுக்கப்படுகிறது. அந்தந்த ஸ்கூலை அடையாளம் காட்டுவதற்காக தான் யூனிபார்ம் உள்ளது.வருங்கால கூட்டணி வலுவாகும்தொடர்ந்து நிருபர்கள், ‘‘வருங்காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்கீறீர்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமியாக இருந்தாலும் சரி, ஜெயக்குமாராக இருந்தாலும் சரி, கூட்டணியை பற்றி வருங்காலத்தில் நாங்கள் முடிவு பண்ணிக் கொள்வோம். இப்போது நாங்கள் எங்கள் பிள்ளைகளை மட்டும் தான் வளர்க்க முடியும் என்று சொல்லியிருக்கிறார்களே’’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு நடிகை குஷ்பு, ‘‘அவர்கள் கூறியதில் தப்பே இல்லையே, நாங்கள் எங்கள் பிள்ளைகளை தானே வளர்க்கிறோம். அவங்க அவங்க பிள்ளைகளை வளர்க்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் அவங்க பிள்ளைகள் செல்ல பிள்ளைகள். அவங்கவங்க வீட்டில் அவங்க பிள்ளைகள் நல்லா இருந்தால்தான் நாளைக்கு சேர்ந்து வேலை செய்யும் போது, அந்த கூட்டணி இன்னும் வலுவான கூட்டணியாக இருக்கும்’’ என்று பதில் அளித்தார்….

The post பள்ளிக்கூடத்திற்குள் ஹிஜாப் அணிவது தவறு என்றால் காவி துண்டு, நீல துண்டு அணிந்து வருவதும் தவறுதான்: நடிகை குஷ்பு பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Khushbu Senshu ,Chennai ,Khushpu ,BJP ,Chennai Municipal Corporation ,Khushbu Senshuru ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...