×

வெறுப்புணர்வு தாக்குதல் அதிகரிப்பு; பாஜ.வுக்கு எதிராக செய்தி வெளியிட்ட நிருபர் நீக்கம்: பிரபல துபாய் பத்திரிகை அதிரடி

புதுடெல்லி: துபாயில் இருந்து வெளியாகும் போர்பஸ் இதழின் இந்தியாவின் நிருபராக இருந்த ரேச்சல் சித்ரா, சமீபத்தில் ஒரு ஆய்வு கட்டுரையை வெளியிட்டு இருந்தார். அதில், ‘இந்தியாவில் வெறுப்பூர்ணவு தாக்குதல் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 2014 முதல் 2020 வரை ஆங்கில மொழி செய்தித்தாள்களில் இருந்து பெறப்பட்ட 212 வெறுப்பு குற்றங்களில், பெரும்பான்மையான தாக்குதல்கள் பாஜ ஆளும் மாநிலங்களில் நடத்தப்பட்டுள்ளது,’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த கட்டுரை வெளியான சில நிமிடங்களில் ரேச்சல் சித்ராவை அந்நிறுவனம் பணியில் இருந்து நீக்கியது. இதுகுறித்து, ரேச்சல் சித்ரா டிவிட் செய்துள்ளார். அதில்,  ‘போர்பஸ் பக்கத்தில் கட்டுரையை பதிவிட்ட சில நிமிடங்களில் எனக்கு மெயில் வந்தது. அதில்,  ‘பணி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இந்த துறையில் 17 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இதுபோன்ற இரக்கமற்ற செயலை நான் பார்த்ததில்லை’ என்று கூறி உள்ளார்….

The post வெறுப்புணர்வு தாக்குதல் அதிகரிப்பு; பாஜ.வுக்கு எதிராக செய்தி வெளியிட்ட நிருபர் நீக்கம்: பிரபல துபாய் பத்திரிகை அதிரடி appeared first on Dinakaran.

Tags : BJP ,Dubai ,New Delhi ,Rachel Chitra ,India ,
× RELATED கருத்து கணிப்புகளை கதறவிட்ட மக்கள்