×

நங்கநல்லூரில் முக்கிய பிரச்னையாக உள்ள மழைநீர் கால்வாய்களை சீரமைப்பேன்: நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் பிரசாரம்

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 165வது வார்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் வி.ஈஸ்வர பிரசாத் நேற்று நங்கநல்லூர் 12வது தெரு முதல் 17வது தெரு வரை வீடு வீடாக சென்று, கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர், ‘‘என்னை வெற்றி பெற செய்தால் நங்கநல்லூர் பகுதியின் முக்கிய பிரச்னையாக உள்ள மழைநீர் கால்வாய்களை தூர்வாரி, மழை காலங்களில் குடியிருப்புகளில் வெள்ளநீர் புகாதவாறு சீரமைப்பேன்.கொசு மருந்து அடிப்பது, குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்றுவது உள்ளிட்ட சுகாதார பணிகளை சிறப்பாக செய்வேன். பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன். பாதாள சாக்கடையை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுப்பேன்,’’ என்றார். வாக்கு சேகரிப்பின் போது ஆலந்தூர் தெற்கு பகுதி காங்கிரஸ் தலைவர் ஆதம் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் ஆர்.பாபு, நாகராஜ சோழன், இ.எஸ்.பாபு, எல்ஐசி பாபு, ம.ஜி.ரமேஷ், என்.எஸ்.டி.கிறிஸ்டோபர், டி.ராஜேஷ், சரவணன், இ.பாலாஜி, ஆர்.நிர்மல்குமார், சிவலிங்கம், கண்ணன், பச்சையப்பன், வினோத், ஆர்,பெருமாள், சு.கதிரவன், காங்கிரஸ் சார்பில் மாவட்ட துணை தலைவர் அய்யம்பெருமாள், பி.எஸ்.ராஜ், லயன் காமராஜ், ஏழுமலை, எஸ்.ரமேஷ், ஜெய்கணேஷ், மதிமுக சார்பில் கராத்தே பாபு உள்பட பலர் பங்கேற்றனர். …

The post நங்கநல்லூரில் முக்கிய பிரச்னையாக உள்ள மழைநீர் கால்வாய்களை சீரமைப்பேன்: நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Nanganallur ,Iswara Prasad ,Nanjil ,Alandur ,Congress ,Nanjil V. Easwara Prasad ,DMK ,Chennai Corporation ,
× RELATED வாட்ஸ்அப் தொடர்பாக பாஜகவினர் இடையே மோதல் : 2 பேர் கைது