×

கீழ்வேளூர் பகுதியில் பயறு சாகுபடி வயலில் தேங்கி நிற்கும் மழைநீர்

கீழ்வேளூர் : நாகை மாவட்டம் கீழ்வேளூர், திருக்குவளை, திருமருகல் நாகை போன்ற பகுதிகளில் தற்போது சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் நெல் தரிசில் குறைந்த செலவில் அதிகம் வருமானம் தரக்கூடிய உளுந்து, பச்சை பயறு வகை பயிர்கள் விதைக்கப்பட்டு தற்போது 25 நாள் பயிராக உள்ளது. இந்நிலையில் நேற்றும், நேற்று முன்தினம் இரவும் திடீரென கன மழை பெய்தது. மழையால் அறுவடைப் பணி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் உளுந்து, பச்சை பயறு பயிர்களின் நீர் தேங்கியுள்ளதால் அழுகும் அபாயத்தில் உள்ளது. பொதுவாகவே உளுந்து, பச்சை பயறு செடிகள் அதிக அளவு வறட்சியை தாங்கி வளரக்கூடியதாகும். இந்த பயிர்களுக்கு தண்ணீர் என்பது செடி வளர வேர்களில் லேசான ஈரம் இருந்தாலே போதுமானதாகும். இந்நிலையில் நேற்று பெய்த கன மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. உளுந்து பயர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்….

The post கீழ்வேளூர் பகுதியில் பயறு சாகுபடி வயலில் தேங்கி நிற்கும் மழைநீர் appeared first on Dinakaran.

Tags : Dewelur ,Thirumurugal Nagai ,Nagai District ,Ditwelur ,Thiruvalla ,Thirumugal Nagai ,
× RELATED நாகையில் குடிநீர் வழங்காததைக்...