×

16ம் தேதி முதல் திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஜவகர் கூறியதாவது: தற்போது கொரோனா  தொற்று குறைந்து வருவதால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான இலவச தரிசன டிக்கெட்டுகள் 16ம் தேதி முதல் 3 இட ங்களில் வழங்கப்படும். அதன்படி, திருப்பதியில் அலிபிரி பேருந்து நிலையம் அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், னிவாசம் பக்தர் ஓய்வறை, கோவிந்தராஜ சுவாமி இரண்டாவது மற்றும் மூன்றாவது சத்திரத்தில் உள்ள கவுன்டர்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும்.  தினமும் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் என பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும், குழந்தைகள் நல மருத்துவமனை கட்டுவதற்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு உதய அஸ்தமன சேவையில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மார்ச்சில் இருந்து ஆர்ஜித சேவையில் பக்தர்களை அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார்….

The post 16ம் தேதி முதல் திருப்பதியில் 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Tirumala Tirupati ,Devasthanam Executive Officer ,Jawakar ,
× RELATED 20 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்