×

கல்லறை தோட்டத்தில் சடலத்தை அடக்கம் செய்தவர்களை வெளியே வரவிடாமல் தடுத்த மக்கள்

சூளகிரி : சூளகிரி அருகே சடலத்தை அடக்கம் செய்தவர்கள், மயானத்தை விட்டு வெளியே வர விடாமல் குடியிருப்புவாசிகள் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சூளகிரி ஊராட்சி கீழ்தெரு, காமநாயக்கனபேட்டை பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்களில் யாரேனும் இறந்தால், அரை கிமீ தொலைவில் உள்ள கிருஷ்ணபாளையம் கிராமத்தில், ஊர்நத்தம் கல்லறை தோட்டத்தில் சடலத்தை அடக்கம் செய்து வந்தனர். இந்த கல்லறை தோட்டம் குடியிருப்புகளின் அருகே இருப்பதால், இறந்தவர்களின் சடலத்தை அடக்கம் செய்ய, அங்குள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம், கீழ்தெருவை சேர்ந்த தபால் ஊழியர் திம்மராஜ்(53), உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால், கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்வதற்கு, வழக்கம் போல் அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என கருதிய அவர்கள், இதுகுறித்து தாசில்தார் மற்றும் சூளகிரி போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர். இதனை தொடர்ந்து, மாலை 3 மணியளவில், கிருஷ்ணபாளையம் கல்லறை தோட்டத்தில் திம்மராஜின் உடலை அடக்கம் செய்தனர். பின்னர், வெளியே வர முயன்ற போது, அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து, கல்லறை தோட்டத்தில் இருந்து அவர்கள் வெளியே வர முடியாதபடி எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் நீலமேகன், சூளகிரி இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், குடியிருப்புகளுக்கு தொலைவில் மயானம் அமைப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்….

The post கல்லறை தோட்டத்தில் சடலத்தை அடக்கம் செய்தவர்களை வெளியே வரவிடாமல் தடுத்த மக்கள் appeared first on Dinakaran.

Tags : Sulakiri ,Mayana ,Dinakaran ,
× RELATED கடமலைக்குண்டு அருகே மயானத்தில்...