×

தண்டராம்பட்டு அருகே டாஸ்மாக் கிடங்கில் திருடிய 2 பேர் கைது-ஒருவர் தலைமறைவு

தண்டராம்பட்டு :  தண்டராம்பட்டு அடுத்த கனந்தம்பூண்டி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு வாணிபக் கிடங்கு உள்ளது. சென்னையிலிருந்து ஏற்றி வரப்படும் மதுபாட்டில்கள் இந்தக் கிடங்கில் இறக்கி வைக்கப்பட்டு அருகிலுள்ள டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கடந்த 5ம் தேதி சென்னையில் இருந்து லாரி மூலம் டாஸ்மாக் மதுபான பாட்டில்களை ஏற்றிக்கொண்டு கிடங்கு வளாகத்தில் மதுபாட்டில்களை இறக்குவதற்காக நிறுத்தி வைத்துவிட்டு டிரைவர், கிடங்கு மேலாளரிடம் தகவல் தெரிவித்து விட்டு கிளம்பிவிட்டார். மறுநாள் காலை 6ம் தேதி வந்து பார்த்தபோது லாரியில் இருந்து 7 கேஸ் மது பாட்டில்கள் தார்ப்பாயை அறுத்துவிட்டு அதிலிருந்து எடுத்துச்சென்று விட்டதாக மேலாளரிடம் தகவல் தெரிவித்தார்.  அதன்பேரில் கிடங்கு மேலாளர் செந்தில்குமார் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் எஸ்ஐ கிருபானந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார் கிடங்கு பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். ஆய்வில் 3 வாலிபர்கள் மதில் சுவரை ஏறி குதித்து மதுபாட்டில்கள் எடுத்துச் சென்றது பதிவாகியிருந்தது. இதை வைத்து தவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் நேற்று கீழ்செட்டிபட்டு பகுதியில் குறைந்த விலையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக தண்டராம்பட்டு போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு சென்றனர்.  அப்போது மதுபாட்டில் விற்றுக்கொண்டிருந்த கீழ்செட்டிப்பட்டு சுதாகர்(24),  நல்லவன்பாளையம் லட்சுமணன்(31) இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அருள்குமார் என்பவர் போலீசார் வருவதை அறிந்து அங்கிருந்து தலைமறைனார். இதையடுத்து இருவர் மீதும் எஸ்ஐ கிருபானந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கூலித்தொழிலாளிகளான இருவரும் மது அருந்த பணமின்றி திருடியதாகவும், மீதமுள்ளவற்றை குறைந்த விலைக்கு விற்றதாகவும் ஒப்புக்கொண்டனர்.இதையடுத்து அவர்களிடமிருந்து 259 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து ₹5 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இருவரையும் தண்டராம்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தப்பிச்சென்ற அருள்குமாரை தேடி வருகின்றனர்….

The post தண்டராம்பட்டு அருகே டாஸ்மாக் கிடங்கில் திருடிய 2 பேர் கைது-ஒருவர் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Tasmac warehouse ,Thandaramptu - one ,Thandarampatu ,Tamil Nadu ,Kanandampoondi panchayat ,Chennai ,Thandarampatu - ,
× RELATED ஊருக்கு வெளியே தனியாக புதிய சுவாமி...