×

மகேஷ் பாபு படத்திலிருந்து விலகியது ஏன்?

ஐதராபாத்: பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் ஜீவா ஜோடியாக ‘முகமூடி’, விஜய் ஜோடியாக ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடித்தார். தொடர்ந்து அவருக்கு தமிழில் நல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. கோடிகளில் சம்பளம் கேட்டதால், கோலிவுட் தயாரிப்பாளர்கள் அவரைப் புறக்கணித்து விட்டனர். இந்நிலையில், இந்தி மற்றும் தெலுங்கில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வரும் அவர், சமீபத்தில் தெலுங்கில் திரிவிக்ரம் னிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக் கும் ‘குண்டூர் காரம்’ என்ற படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமானார். இதில் மற்றொரு ஹீரோயினாக லீலா நடிக்கிறார். இந்த நிலையில், திடீரென்று அந்தப் படத்தில் இருந்து பூஜா ஹெக்டே விலகி விட்டார். திட்டமிட்டபடி ஷூட்டிங் நடக்காததால், அவருடைய கால்ஷீட்டில் பிரச்ைன ஏற்பட்டதாகவும், இதையடுத்து அவராகவே இந்தப் படத்தில் இருந்து விலகியதாகவும் அவரது தரப்பு சொன்னது.

ஆனால், பூஜா ஹெக்டேவின் சமீபகால படங்கள் வெற்றிபெறவில்லை என்பதாலும், அவருக்கு அதிக சம்பளம் தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாலும், ‘குண்டூர் காரம்’ படத்திலிருந்து நீக்கிவிட்டதாக தெலுங்கு படவுலகில் பேசிக்கொள்கின்றனர். அவருக்கு பதிலாக சம்யுக்தாவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடக்கிறது. மலையாள நடிகையான அவர், தமிழில் ‘களரி’, ‘ஜூலை காற்றில்’, ‘வாத்தி’ ஆகிய படங்களில் நடித்து இருந்தார். ‘குண்டூர் காரம்’ படத்தில் பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு, ரம்யா கிருஷ்ணன், ஜெயராம் நடிக்கின்றனர். பூஜா ஹெக்டே இப்படத்தில் விலகியது குறித்து தெலுங்கு படவுலகில் சர்ச்சைக்குரிய ஒரு விஷயமாகப் பேசப்படுகிறது. அவருக்கு பாலிவுட் படத்தில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் இருப்பதால்தான் டோலிவுட்டைப் புறக்கணிக்கிறார் என்பது போல் ரசிகர்கள் பேசி வருகின்றனர். இதையறிந்த பூஜா ஹெக்டே, இந்தப்படத்தில் இருந்து விலகியதற்கான காரணம் குறித்து கூறுகையில், ‘தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கும் ‘குண்டூர் காரம்’ படத்தில் நடிக்க நான் ஒப்பந்தமானது உண்மை. ஆனால், படப்பிடிப்பு தொடங்க தாமதமான நிலையில்தான் என்னால் அந்தப் படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. காரணம், ஏற்கனவே நான் மற்ற படங்களுக்கு கொடுத்திருந்த கால்ஷீட்டில் பிரச்னை ஏற்பட்டது. எனவேதான் ‘குண்டூர் காரம்’ படத்திலிருந்து நானாகவே விலகிவிட்டேன்’ என்றார்.

The post மகேஷ் பாபு படத்திலிருந்து விலகியது ஏன்? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mahesh Babu ,Hyderabad ,Bollywood ,Pooja Hegde ,Jeeva ,Vijay ,Kollywood ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மகேஷ் பாபு சந்திப்பு