×

ஹரீஷ் கல்யாண் ஜோடியாக இந்துஜா

சென்னை : சசி இயக்கத்தில் ‘நூறு கோடி வானவில்’ சண்முகம் முத்துசாமி டைரக்‌ஷனில் ‘டீசல்’ கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் ‘எல்ஜிஎம்’ உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான ‘நெஞ்சுக்கு நீதி’ படத்துக்கு வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ‘லப்பர் பந்து’ ஆகிய படங்களில் நடித்து வரும் ஹரீஷ் கல்யாண் தற்போது மீண்டும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அப்படத்துக்கு ‘பார்க்கிங்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சோல்ஜர்ஸ் பேக்டரி மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இதில் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக இந்துஜா நடிக்கிறார். கடைசியாக இந்துஜா நடிப்பில் வெளியான படம் ‘நானே வருவேன்’. தவிர முக்கிய வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர் இளவரசு ராம ராஜேந்திரன் பிரார்த்தனா நாதன் நடிக்கின்றனர். ஜிஜூ சன்னி ஒளிப்பதிவு செய்ய சாம் சி.எஸ் இசை அமைக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் கூறுகையில் ‘இது முழுநீள திரில்லர் டிராமா கதை கொண்ட படம். கார் வைத்திருக்கும் பெரும்பாலானவர்கள் ‘பார்க்கிங்’ பிரச்னையை சந்தித்திருப்பார்கள். அதை மையமாக வைத்து படம் உருவாகியுள்ளது. முதலில் பார்ப்பதற்கு சிறிய மோதல் போல் தெரியும் பார்க்கிங் விவகாரம் பிறகு என்னென்ன சிக்கலுக்கு கொண்டு செல்கிறது என்று கதை அமைக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவனத்தில் பணியாற்றுபவராக ஹரீஷ் கல்யாண் நடிக்க இதுவரை நடித்திராத கேரக்டரில் இந்துஜா நடிக்கிறார். சென்னையில் நடக்கும் இக்கதையில் ெசாந்த கார் வைத்திருக்கும் அனைவரும் தங்களைப் பொருத்திக்கொள்ள முடியும்’ என்றார்.

The post ஹரீஷ் கல்யாண் ஜோடியாக இந்துஜா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Induja ,Harish Kallyan ,Chennai ,Rasan Pachamuthu ,Stalin ,Dhoni ,Shanmukam Muthusamy ,Movement ,Hinduja ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு...