×

216 அடி உயர சமத்துவ சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டதா? ராகுல் கிண்டல்

புதுடெல்லி: தெலங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே உள்ள  ராம்நகரில் வைணவ ஆச்சாரியாரான ராமானுஜருக்கு 216 அடி உயர பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.1000 கோடி செலவில்  216 அடி உயரத்தில் செய்யப்பட்டு, ‘சமத்துவ சிலை’ என பெயரிடப்பட்டுள்ள இதை, கடந்த 5ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதை கண்டு தரிசிப்பதற்காக நாடு முழுவதிலும் இருந்து மக்கள் குவிந்து வருகின்றனர்.  நேற்று முன் தினம்  ஒரே நாளில்  2 லட்சம்  பக்தர்கள் ராமானுஜரை தரிசித்துள்ளனர். இந்நிலையில், ராமானுஜரின் இந்த பிரமாண்ட சிலை இந்தியாவில் செய்யப்படாமல் சீனாவில் செய்யப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. இதை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டித்துள்ளார். அனைத்தையும் இந்தியாவில் தயாரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும், பிரதமர் மோடியின் ‘ ஆத்மநிர்பார்’  திட்டத்தை குறிப்பிட்டு, அவர் நேற்று டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில்,  ‘‘சமத்துவ சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. ‘புதிய இந்தியா’ என்பது ‘சீனாவின் நிர்பார்’ (சீனா தயாரிப்பு) என மாறிவிட்டதோ…’ என கேட்டுள்ளார். சீனாவுடன் எல்லையில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ராமானுஜர் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது….

The post 216 அடி உயர சமத்துவ சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டதா? ராகுல் கிண்டல் appeared first on Dinakaran.

Tags : China ,Raquel ,New Delhi ,Ramanujar ,Vainava ,Ramnagar ,Hyderabad, Telangana ,
× RELATED சீனாவில் மலைப்பாதை சாலை சரிந்து...