×

நகைக்கடன் தள்ளுபடிக்கு எதிரான மனு தள்ளுபடி

மதுரை: நகைக்கடன் தள்ளுபடிக்கு எதிரான மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த லிங்கராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை கடந்த நவ. 1ல் வெளியிட்டது. கூட்டுறவு வங்கிகளில் நகையை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே இந்த தள்ளுபடி பொருந்தும் என அதில் கூறப்பட்டுள்ளது. பல இடங்களில் கூட்டுறவு வங்கிகள் இல்லை. இதனால் பலரும் பொதுத்துறை வங்கிகளில் நகைகளை அடகு வைத்துள்ளனர். மேலும், வட்டியை முறையாக செலுத்தாதவர்களுக்கே இது பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இது முறையாக வட்டி செலுத்துவோரின் மனநிலையை மாறுபடுத்தும் வகையில் உள்ளது. எனவே, 5 சவரன் விவசாய நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், இந்த மனு ஏற்புடையதல்ல எனக்கூறி தள்ளுபடி செய்தனர்….

The post நகைக்கடன் தள்ளுபடிக்கு எதிரான மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Madurai ,ICourt branch ,Lingaraj ,Tiruchendur, Thoothukudi District ,
× RELATED தூத்துக்குடி அருகே அரசின் 1 ஏக்கர்...