×

மதுராந்தகம் நகரில் அரசு கல்லூரி அமைத்து தரப்படும்: திமுக வேட்பாளர் மலர்விழி குமார் உறுதி

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் அரசு கலை கல்லூரி அமைத்து தரப்படும் என 17வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் நகரமன்ற தலைவர் மலர்விழி குமார் வாக்காளர்களிடம் உறுதியளித்தார். மதுராந்தகம் நகராட்சி 17வது வார்டில் திமுக சார்பில், நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளரும், முன்னாள் நகரமன்ற தலைவருமான மலர்விழி குமார் அப்பகுதி பெண்களுடன் சேர்ந்து நடைபயணமாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, அவர் வாக்காளர்களிடம் பேசியதாவது.பாலாற்றில் இருந்து மதுராந்தகம் நகரத்துக்கு குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும். மதுராந்தகம் நகரத்துக்கு அரசு கலைக்கல்லூரி அமைத்து தரப்படும். மதுராந்தகம் ஏரி தூர்வாரப்படும், மதுராந்தகம் நகரத்துக்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்படும் என்றார். தொடர்ந்து மதுராந்தகம் நகராட்சி 14வது வார்டு நகரமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் சசிகுமாரை ஆதரித்து, அருளால் ஈஸ்வரன் கோயில் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, உதயம் குளக்கரை தெரு, இருளர் பகுதி ஆகிய இடங்களில் நேற்று மாலை உதயசூரியன் சின்னத்துக்கு வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, 2வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் திமுக வேட்பாளரும் நகர செயலாளருமான கே.குமார் உள்பட பலர் உடன் இருந்தனர். …

The post மதுராந்தகம் நகரில் அரசு கல்லூரி அமைத்து தரப்படும்: திமுக வேட்பாளர் மலர்விழி குமார் உறுதி appeared first on Dinakaran.

Tags : Govt College ,Madurandakam ,Varvinzhi Kumar ,Madurandagam ,Government College of Arts ,Dizhagam ,17th Ward ,Government College ,Flower Kumar ,Dinakaran ,
× RELATED மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல்...