×

165வது வார்டு பகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பேன்: நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் வாக்குறுதி

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி ஆலந்தூர் 165வது வார்டு திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் வி.ஈஸ்வரபிரசாத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று ஆதம்பாக்கம், இன்கம்டேக்ஸ் காலனி, வேல் நகர், பாலாஜி நகர், முத்தையால் நகர், பாரதிதாசன் நகர், போன்ற பகுதிகளில் வீடு வீடாக ெசன்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர், ‘‘கை சின்னத்தில் போட்டியிடும் என்னை வெற்றி பெற செய்தால், இந்த பகுதியில் சுகாதார பிரச்னை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைப்பேன். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை துரிதப்படுத்துவேன். வலுவிழந்த பாதாள சாக்கடை குழாய்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பேன். அவ்வப்போது மக்களின் குறைகளை கேட்பேன்,’’ என்றார்.  வாக்கு சேகரிப்பின்போது, ஆலந்தூர் தெற்கு பகுதி காங்கிரஸ் தலைவர் ஆதம் ரமேஷ், முன்னாள் கவுன்சிலர் ஆர்.பாபு, நாகராஜசோழன், சேது செந்தில், மாவட்ட பிரதிநிதி லியோ பிரபாகரன், ஜி.சுதாகர், ஜி.ரமேஷ், கிறிஸ்டோபர், டி.ராஜேஷ், ராஜ்குமார், வழக்கறிஞர், ஆனந்தகுமார், பெருமாள், பாபா செந்தில், சு.கதிரவன், கண்ணன், காங்கிரஸ் சார்பில் லயன் காமராஜ், பி.எஸ்.ராஜ், எஸ்.வடிவேல், சுரேஷ், ஏழுமலை, எஸ்.ரமேஷ், ஜெய்கணேஷ்,  மதிமுக சார்பில் கராத்தே பாபு, ஜி.திருநா உள்பட பலர் பங்கேற்றனர். …

The post 165வது வார்டு பகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பேன்: நாஞ்சில் ஈஸ்வர பிரசாத் வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Ward ,165 ,Nanjil Ishwara Prasad ,Alandur ,Chennai Municipal Corporation ,165th ,Ward DMK Alliance ,Congress ,Nanjil V. Iswara Prasad ,Nanjil Iswara Prasad ,Dinakaran ,
× RELATED மறைமலைநகர் நகராட்சியில் என்எச்...