×

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஆண்டர்சன், பிராட் நீக்கம்

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. முதல் டெஸ்ட் மார்ச் 8ம் தேதி ஆண்டிகுவாவில் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஷஸ் தொடரில் படுதோல்வியை சந்தித்த நிலையில் ஜோ ரூட் கேப்டனாக நீடிக்கிறார். முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களாக ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டுவர்ட் பிராட் நீக்கப்பட்டுள்ளனர். இருவரும் இணைந்து இங்கிலாந்து அணிக்காக 1177விக்கெட் வீழ்த்திய நிலையில் அவர்களின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. இவர்களை தவிர ஜோஸ் பட்லரும் நீக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் அணி: ஜோ ரூட் (கே), ஜானி பேர்ஸ்டோவ், ஜாக் க்ராலி, மேத்யூ பிஷ்ஷர், பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், அலெக்ஸ் லீஸ், சாகிப் மஹ்மூத், கிரேக் ஓவர்டன், மேத்யூ பார்கின்சன், ஆலி போப், ஒல்லி ராபின்சன், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ்வோக்ஸ், மார்க் வூட்…

The post இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஆண்டர்சன், பிராட் நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Anderson ,Broad ,England ,London ,England cricket team ,West Indies ,England Test ,Dinakaran ,
× RELATED கண்டன்விளையில் பைக் விபத்தில் வாலிபர் படுகாயம்