×

ஆர்யா, கவுதம் கார்த்திக் இணையும் படத்தில் மஞ்சு வாரியர்

சென்னை: ஆர்யா, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர். எக்ஸ். இப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். விஷ்ணு விஷால், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் எஃப்.ஐ.ஆர். மனு ஆனந்த் இயக்கத்தில் வெளியான இப்படம் படு தோல்வி அடைந்தது. இப்படத்தை தொடர்ந்து இவர் ஆர்யா, கவுதம் கார்த்திக் மற்றும் மஞ்சு வாரியர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மிஸ்டர்.எக்ஸ் படத்தை இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான வீடியோவை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

The post ஆர்யா, கவுதம் கார்த்திக் இணையும் படத்தில் மஞ்சு வாரியர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Arya ,Gautham Karthik ,Chennai ,Manju Warrier ,Vishnu Vishal ,Gautham Vasudev Menon ,Manjima Mohan ,Raisa Wilson ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திகில் தொடரில் நடித்ததை மறக்க முடியாது: ஆர்யா