×

பிறந்த நாளில் வெளியானது விஜய்யின் ‘லியோ’ பர்ஸ்ட் லுக்

சென்னை: ‘மாஸ்டர்’ படத்தின் வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் ‘லியோ’ படம் உருவாகி வருகிறது. அக்டோபர் 19ம் தேதியன்று திரையரங்குகளில் லியோ வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் தி ரூட் நிறுவனம் இணைந்து லியோ படத்தினை தயாரிக்கின்றன. இந்த ஆக்‌ஷன் திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், பிக்பாஸ் ஜனனி, அபிராமி, இயக்குனர்கள் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். லியோ படத்தின் எதிர்பார்ப்புக்கு இடையில், விஜய் – வெங்கட் பிரபு இணையும் ‘விஜய் 68’ படத்தின் அறிவிப்பு வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது எனலாம்.

இருப்பினும், தற்போதைக்கு லியோ படத்தின் மீதுதான் முழு கவனமும் இருக்க வேண்டும் என்பதால், விஜய் 68 குறித்து அப்டேட் இப்போதைக்கு வராது என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் லியோ படத்தின் ஒரு பாடல் வெளியிடப்படும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். அதன்படி நேற்று நான் ரெடி பாடல் வெளியிடப்பட்டது. விஜய்க்கு நேற்று பிறந்த நாள். இதனையொட்டி நேற்று அதிகாலை 12 மணிக்கு ‘லியோ’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. அதன்படி லியோ பட பர்ஸ்ட் லுக் வெளியானது. இதில் விஜய் மெகா சுத்தியலை வைத்து ஆக்‌ஷன் காட்சியில் நடிக்கும் ‘போஸ்’ இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கினர்.

The post பிறந்த நாளில் வெளியானது விஜய்யின் ‘லியோ’ பர்ஸ்ட் லுக் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,Lokesh Kanakaraj ,Vijay ,Leo ,Sven Screen Studios Company ,The Root Company ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED உ.பி.யில் காவலர் தேர்வுக்கான விடைக்...