×

மீண்டும் பாலிவுட் போனார் தனுஷ்

மும்பை: தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ‘தனு வெட்ஸ் மனு’, ‘ராஞ்சனா’, ‘அத்ரங்கி ரே’ உள்ளிட்ட இந்தி படங்களை இயக்கிய பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல். ராய்யின் புதிய படத்தில் தனுஷ் இணைந்துள்ளார். தேரே இஷ்க் மே என பெயர் வைத்துள்ளனர். இதற்கு உன் காதலில் என்று அர்த்தம். ஆனந்த் ராய் இயக்கி, தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இது தொடர்பான வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள தனுஷ், ‘ராஞ்சனா வெளியாகி பத்து வருடங்கள் ஆகிறது. சில திரைப்படங்கள் நம் வாழ்க்கை முழுவதையும் மாற்றிவிடும். ராஞ்சனாவை கிளாசிக்காக மாற்றிய உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். தற்போது ஒரு தசாப்தத்திற்கு பிறகு ராஞ்சனாவின் உலகில் இருந்து ஒரு கதை, ‘தேரே இஷ்க் மே’. எதுமாதிரியான பயணம் எனக்காக காத்திருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால், இது ஒரு சாகசமாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்கும் எங்களுக்கும்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த இந்தி படம் 2024ம் ஆண்டு வெளியாக உள்ளது. ராஞ்சனாவை போல் இதையும் தமிழில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

The post மீண்டும் பாலிவுட் போனார் தனுஷ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Dhanush ,Bollywood ,Mumbai ,Arun Matheswaran ,Captain Miller ,Anand ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகர் சல்மான்கான் வீடு அருகே நடந்த...