×

வங்கி திவால் சட்டம் மூலம் நடக்கும் முறைகேடுகளை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘வங்கி  திவால் சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி பொதுத்துறை வங்கிகளுக்கு பெரும் நஷ்டம்  ஏற்படுவதை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மக்களவையில் திமுக எம்பி தயாநிதி மாறன் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக எழுத்துபூர்வமான பதில்களுக்காக  மக்களவையில் மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் எழுப்பிய கேள்வியில் கூறியிருப்பதாவது:* வங்கி திவால் சட்டத்தை முறைகேடாக பயன்படுத்தி வங்கிகளில் இருந்து பெரும் தொகையை கடனாக பெற்ற தொழிலதிபர்கள் வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்படும் வகையில் சலுகைகள் பெறுவது குறித்து தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. அதுகுறித்து ஒன்றிய அமைச்சகம் அறியுமா?* நிறுவனங்கள் மீது கடன் பெற்றவர்கள் வங்கி திவால் சட்டத்தை தவறாக பயன்படுத்தி தங்களின் குடும்பங்களில் உள்ளவர்கள் பெயரிலோ அல்லது பினாமிகளின் பெயரிலோ மீண்டும் அந்நிறுவனத்தின் உரிமம் பெறுவது குறித்து ஒன்றிய அமைச்சகம்  விசாரணை எதுவும் நடத்தி வருகிறதா? * திவாலான தொழிலதிபர்கள் வங்கிகள் நஷ்டத்தை சந்திக்கும் அளவு சலுகைகள் பெறும் வகையில் ஆலோசனை நிறுவனங்கள் திவால் சட்டத்தை முறைகேடாக பயன்படுத்துவது குறித்து ஒன்றிய அமைச்சகம்  விசாரணை நடத்த உள்ளதா?* வங்கி திவால் சட்டத்தை முறைகேடாக பயன்படுத்துவது தொடர்பாக அமைச்சகத்திடமோ அல்லது ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை,புலனாய்வு துறை,லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்துள்ளதா? அப்படி எனில் அதுபற்றிய விவரங்களை தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கேட்டுள்ளார்….

The post வங்கி திவால் சட்டம் மூலம் நடக்கும் முறைகேடுகளை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Government of the Union ,Dianiti Maratan ,New Delhi ,Union Government ,Diyaniti Maradan ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...