×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருப்பாச்சூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர், எஸ்பி ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் அடங்கிய ஆவடி மாநகராட்சி, திருவள்ளூர், திருத்தணி, திருவேற்காடு, பூந்தமல்லி, பொன்னேரி, திருநின்றவூர் ஆகிய 6 நகராட்சிகளிலும், ஊத்துக்கோட்டை, ஆரணி, கும்மிடிபூண்டி, மீஞ்சூர், நாரவாரிகுப்பம், திருமழிசை பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை ஆகிய 8 பேரூராட்சிகளிலும் உள்ள 318 வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளுக்காக 51 வாக்குச் சாவடிகளில் பதிவாகும் வாக்கு இயந்திரங்களை பாதுகாப்பான முறையில் வைப்பதற்கான பாதுகாப்பு அறை மற்றும் வாக்கு எண்ணும் மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ள திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் திருமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான ஆல்பி ஜான் வர்கீஸ், எஸ்பி வீ.வருண்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்கள் வாக்குப்பதிவு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கப்படுவதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் வாக்கு எண்ணும் நாளான வருகின்ற 22 ம் தேதி வரை வாக்கு எந்திரங்களை பாதுகாப்பாக வைப்பது மற்றும் வாக்கு எண்ணும் தினத்தன்று பாதுகாப்பான முறையில் வாக்கு எண்ணும் பணிகள் நடைபெறுவதற்கு தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து நகராட்சி ஆணையர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் போலீசாருடன் கலந்தாலோசனை மேற்கொண்டு அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினர். இதனைத் தொடர்ந்து கலெக்டர் மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் திருவள்ளூர் – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினரால் நடைபெற்று வரும் கண்காணிப்பு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது  டிஎஸ்பி சந்திரதாசன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) நாகூர்மீரான் ஒலி, கல்லூரி முதல்வர் அமுதாயி, பறக்கும் படை அலுவலர் லோகநாதன், பறக்கும் படை குழுவினர் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்….

The post நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருப்பாச்சூரில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர், எஸ்பி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : SP ,Vote ,Counting ,Centre ,Tiruppachur ,Thiruvallur ,Awadi Municipal Corporation ,Thiruvallur District ,Tiruvalli ,Thiruvalli ,Ponneri ,Thirunandavur ,Vote-Counting Centre ,
× RELATED போக்குவரத்து பாதிப்பு...