பிஜ்னோர்: பிரதமர் மோடியின் உபி பயணம் மோசமான வானிலையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், ‘உபியில் சூரியன் பிரகாசிக்கிறது. பாஜவின் வானிலைதான் சரியில்லை’ என எதிர்க்கட்சியான ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி விமர்சித்தார். உத்தர பிரதேசத்தில் வரும் 10ம் தேதி முதல் அடுத்த மாதம் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் நடக்கும் பிஜ்னோர் தொகுதியில் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது. ஆனால் மோசமான வானிலையால் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், காணொலி மூலம் பேசிய பிரதமர் மோடி, ‘‘உத்தரபிரதேசத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் மிகுந்த அக்கறை காட்டி வருகிறோம். போலி சமாஜ்வாடிகளின் அரசியலால் உபி.யின் வளர்ச்சி தேக்கமடைந்தது. இந்த நபர்களுக்கு சாதாரண மனிதனின் வளர்ச்சி தாகம், முன்னேற்ற தாகம்,வறுமையில் இருந்து விடுதலை தாகம் ஆகியவற்றுடன் எந்த தொடர்பும் இல்லை. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தங்களுடைய தாகத்தையும் நெருங்கிய உறவுகளின் தாகத்தையும் தணித்தனர். முன்பு பெண்கள் மானபங்கம், செயின் போன்றவை சர்வசாதாரணமாக நடந்தன. அந்த அச்சத்தில் இருந்து பெண்களை விடுவித்தது யோகி ஆதித்யநாத் அரசு. பெண்களுக்கு உண்மையான மரியாதையை வழங்கினோம்’’ என்றார்.இதற்கிடையே, சமாஜ்வாடியுடன் கூட்டணி அமைத்துள்ள ராஷ்டிரிய லோக் தள தலைவர் ஜெய்ந்த் சவுத்ரி தனது டிவிட்டரில், ‘‘உபியில் சூரியன் பிரகாசிக்கிறது. பாஜவின் வானிலைதான் சரியில்லை’’ என பதிவிட்டு, பொதுக்கூட்டத்தில் வெயிலுக்கு நடுவே மக்கள் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும், கூகுளில் பிஜ்னோரின் வானிலை அறிக்கையையும் இணைத்து பதிவிட்டார். மீரட் கன்டோன்மென்ட்டில் நடந்த பிரசாரத்தில் பேசிய ஜெயந்த், ‘‘பிஜ்னோரில் விவசாயிகளுக்கு மின்சாரம், வளர்ச்சியை தருவதாக பாஜ ஏற்கனவே வாக்குறுதி தந்திருந்தது. ஆனால் எதையும் செய்யவில்லை. பிரதமர் வந்தால் மக்கள் இதைப் பற்றி எல்லாம் கேள்வி கேட்பார்கள் என்பதால், வானிலை மோசம் எனக் கூறி வரவில்லை’’ எனப் பேசினார்.* இன்றுடன் பிரசாரம் ஓய்கிறதுஉபி.யில் முதல் கட்ட தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கு இன்று மாலையுடன் பிரசாரம் நிறைவடைகிறது. முதல் கட்ட தேர்தல் 58 தொகுதிகளில் நாளை மறுதினம் நடக்க உள்ளது. இதனால், பாஜ, சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளை முற்றுகையிட்டுள்ளனர்….
The post உபியில் சூரியன் பிரகாசிக்கிறது பாஜவின் வானிலை சரியில்லை: பிரதமர் வராதது குறித்து எதிர்க்கட்சி கிண்டல் appeared first on Dinakaran.