×

நாகர்கோவிலில் நடந்த பேராசிரியர் மனைவி கொலையில் பேரன் கைது-கழிவறையில் பதுங்கி இருந்தவர் சிக்கினார்

நாகர்கோவில் : நாகர்கோவில் இந்து கல்லூரி அருகில் உள்ள கவிமணி நகரை சேர்ந்தவர் செல்லையா. ஓய்வு பெற்ற பேராசிரியர். இவர் கடந்த சில வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி பேபி சரோஜா (70). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். பேபி சரோஜா மட்டும் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் வீட்டுக்குள் இருந்து பேபி சரோஜாவின் அலறல் சத்தம் கேட்டது. அக்கம் பக்கத்தினர் சென்ற போது வீடு உள் பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்ற போது மூக்கில் ரத்த காயத்துடன் பேபி சரோஜா இறந்து கிடந்தார். அவரது கழுத்து மற்றும் கைகளில் இருந்த நகைகளை காண வில்லை.  எஸ்.பி. பத்ரி நாராயணன் மற்றும்  கோட்டார் போலீசார் சம்பவ இடதில் விசாரணை மேற்கொண்டார்.  பேபி சரோஜாவின் வீட்டு முன் பைக் ஒன்றும் நின்றது. அந்த பைக்கையும் போலீசார் கைப்பற்றினர். வீட்டின் மாடியில் தேடிய போது, பேபி சரோஜாவின் நகைகள் கிடந்தன. பேபி சரோஜாவை ெகாலை செய்து விட்டு கொலையாளி மாடி வழியாக தப்பி சென்ற போது, நகைகள் தவறி விழுந்திருக்கலாம் என கூறப்பட்டது.  இதற்கிடையே சம்பந்தப்பட்ட பைக் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, சிறமடம் பகுதியை சேர்ந்த பத்மநாபபிள்ளை மகன் பாஸ்கர் (46) என்பவருக்கு ெசாந்தமானது என்பதும், உறவினரான இவர் அடிக்கடி பேபி சரோஜாவிடம்  பணம் வாங்கி செல்வதும் தெரிய வந்தது. பாஸ்கரை தேடிய போது அவர் தலைமறைவாகி இருந்தார். சம்பவ பகுதியில் போலீசார் விசாரித்துக் கொண்டிருந்த போது, அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கழிவறையில் இருந்து வாலிபர் ஒருவர் தப்பி ஓடினார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் தான் போலீஸ் தேடிய பாஸ்கர் என்பது தெரிய வந்தது. விசாரணையில், பணம் தர மறுத்ததால் பேபி சரோஜாவிடம் நகைகளை பறித்து விட்டு கீழே தள்ளியதில் அவர் இறந்து விட்டார் என பாஸ்கர் கூறினார். இதையடுத்து பாஸ்கரை போலீசார் கைது செய்தனர். பாஸ்கர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:நான்  தற்போது குடும்பத்துடன்  நாகர்கோவில் தட்டான்விளை பார்க் தெருவில் வசித்து வருகிறேன். மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். உறவு முறையில், நான் பேபி  சரோஜாவுக்கு பேரன் ஆவேன். எனக்கு டிரைவிங் நன்றாக தெரியும். பேபி சரோஜா  குடும்பத்தினர் வெளி இடங்களுக்கு சுற்றுலா செல்லும் போது தற்காலிக டிரைவராக  வந்து செல்வேன். உறவினர் என்பதால் நான் கேட்கும் பணத்தை தருவார்கள். செலவுக்கு பணம் இல்லாத சமயங்களில் பேபி சரோஜாவிடம் வந்து பணம் கேட்பேன்.  அவரும்  பணம் தருவார். சம்பவத்தன்று மதியமும் நான் பணம்  கேட்க வந்தேன். அப்போது பேபி சரோஜா பணம் இல்லை என கூறி விட்டு வெளியே செல்ல  முயன்றார். நான் கதவை உள் பக்கமாக பூட்டி விட்டு, அவரது கழுத்தை பிடித்து  பணம் கேட்டேன். அப்போது தான் எனக்கு அவரது நகைகளை பறிக்க வேண்டும்  என்ற யோசனை வந்தது. நான் கழுத்தில் கிடந்த செயினை பறித்ததும் அவர் கூச்சல்  போட்டார். இதனால் அவரை கீழே தள்ளி விட்டு செயின், வளையல்களை  பறித்தேன். அவர் ஷோபாவில் விழுந்ததில் மூக்கில்  அடிபட்டது.அவர் மயக்கம் அடைந்திருப்பார் என்று நினைத்தேன். இந்த  சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததால், மாடி வழியாக சென்று அருகில்  உள்ள ஆள் இல்லாத ஒரு வீட்டில் கழிவறையில் பதுங்கி இருந்தேன். சிறிது  நேரத்தில் போலீசார் குவிந்தனர். அதன் பின்னர் தான் பேபி சரோஜா இறந்து  விட்டார் என்பது தெரிந்தது. நான் தப்பி ஓடும் அவசரத்தில் நகைகளையும்  வீட்டின் மாடியில் தவற விட்டு விட்டேன்.  வெளியூர் சென்று தலைமறைவாகலாம் என  நினைத்தேன். அதற்குள் போலீசார் பிடித்து விட்டனர்.இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக தெரிகிறது.2 மணி நேரத்தில் கைதுசம்பவம் குறித்து அறிந்ததும் தனிப்படை போலீசார் வந்து விசாரணை மேற்கொண்டனர். பைக்  எண்ணை வைத்து நடந்த விசாரணையில் பாஸ்கர் குறித்த விபரம் தெரிந்தது. மேலும்  பேபி சரோஜாவின் மகளும், பைக்கை பார்த்து விட்டு பாஸ்கர் தான் வந்தார்  என்பதை உறுதிப்படுத்தினார். இதனால் பாஸ்கரை தேட தொடங்கிய 2 மணி நேரத்தில்  அவர் சிக்கினார்….

The post நாகர்கோவிலில் நடந்த பேராசிரியர் மனைவி கொலையில் பேரன் கைது-கழிவறையில் பதுங்கி இருந்தவர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Grandson ,Nagercoil ,Chelliah ,Kavimani Nagar ,Hindu College ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது