×

மேகமலை வனப்பகுதியில் காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு-மலைக்கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

வருசநாடு : வருசநாடு அருகே, மேகமலை வனப்பகுதியில் காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால், மலைக்கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வருசநாடு அருகே, மேகமலை வனப்பகுதியில் வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம் உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் காட்டுமாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால், மலைக்கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், காட்டுமாடுகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை அதிகாரிகள் ரோந்து சென்று வருகின்றனர். மேலும், மாலை 6 மணிக்கு மேல் வனசோதனைச் சாவடிப் பகுதிகளுக்கு செல்லக்கூடாது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மலைக்கிராம மக்கள் கூறுகையில், ‘வெள்ளிமலை மலைப்பகுதிகளில் காட்டுமாடுகள் அதிகளவில் நடமாடுகின்றன. இதனால், சாலைகளில் செல்வதற்கு அச்சமாக உள்ளது. மலைவாழ் கிராமவாசி முருகன் கூறுகையில், ‘காட்டுமாடுகள் நடமாடுவதால் தேன் எடுத்தல், கிழங்கு எடுக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்கள் வாழ்வாதாரத்துக்கு மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும். மேலும், கால்நடைகள் வழங்க வேண்டும்’ என்றனர். …

The post மேகமலை வனப்பகுதியில் காட்டுமாடுகள் நடமாட்டம் அதிகரிப்பு-மலைக்கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Megamalai forest ,Varasanadu ,Malaikirama ,Megamalai Forests ,Dinakaran ,
× RELATED வருசநாடு அருகே புதிய தடுப்பணை பயன்பாட்டுக்கு வந்தது