×

மகேஷ்பாபு படத்திலிருந்து பூஜா ஹெக்டே, தமன் நீக்கம்: டோலிவுட்டில் பரபரப்பு

ஐதராபாத்: மகேஷ் பாபுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ‘குண்டூர் காரம்’ படத்திலிருந்து இசையமைப்பாளர் தமன் நீக்கப்பட்டுள்ளார். அதேபோல் பட ஹீரோயின் பூஜா ஹெக்டேவையும் படக்குழு நீக்கியது. மகேஷ்பாபு நடிக்கும் புதிய படத்துக்கு ‘குண்டூர் காரம்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அல்லு அர்ஜூனை வைத்து ‘ஆலா வைகுந்தபுரமுலோ’ படத்தை இயக்கிய த்ரிவிக்ரம் னிவாஸ் இயக்குகிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, லீலா, ஜெகபதி பாபு, ஜெயராம், சுனில், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி சங்கராந்திக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படத்துக்கு தமன் இசையமைப்பதாக முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படத்திலிருந்து நீக்கப்பட்டு, அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகேஷ் பாபுவுடன் தமனுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடே இந்த திடீர் மாற்றத்துக்கு காரணம் என டோலிவுட்டில் பேச்சு எழுந்துள்ளது. இந்நிலையில் படத்திலிருந்து ஹீரோயின் பூஜா ஹெக்டேவும் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. அவரை படத்திலிருந்து நீக்கியதற்கான காரணம் தெரியவில்லை.

ஆனால் கால்ஷீட் பிரச்னையாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் தமன், நாளை முதல் தன்னுடைய ஸ்டுடியோவில் மோர் கடை ஒன்றை திறக்கப் போவதாகவும், வயிற்றெரிச்சலால் அவதிப்படுபவர்களுக்கு இலவசமாக மோர் வழங்கப்போவதாகவும் கிண்டலாக பதிவிட்டு இருந்தார். ‘குண்டூர் காரம்’ படத்திலிருந்து தன்னை நீக்கியதால் தமன் இதுபோல் டிவிட் செய்திருக்கிறார் என கூறப்படுகிறது. மகேஷ்பாபு படத்திலிருந்து 2 முக்கிய கலைஞர்கள் நீக்கம் காரணமாக டோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post மகேஷ்பாபு படத்திலிருந்து பூஜா ஹெக்டே, தமன் நீக்கம்: டோலிவுட்டில் பரபரப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Pooja Hegde ,Taman ,Maheshbabu ,Tollywood ,Hyderabad ,Thaman ,Mahesh Babu ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பூஜா ஹெக்டேவின் தேவா: அக்டோபர் 11ல் ரிலீஸ்