×

கோழி முட்டையில் இருந்து கோவிட் தடுப்பூசி: ஐச்சன் மவுன்ட் சினாய் மருத்துவக் கல்லூரியில் அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவின் புதிய முயற்சி

நியூயார்க்: கோழி முட்டையில் இருந்து மிக மலிவான முறையில் புதிய ரக கொரோனா தடுப்பூசி ஒன்றை நியூயார்க் நகரில் உள்ள ஐச்சன் மவுன்ட் சினாய் மருத்துவக் கல்லூரியில் சர்வதேச விஞ்ஞானிகள் குழு உருவாகியுள்ளது. பிரேசில், வியட்நாம், தாய்லாந்த் போன்ற நாடுகளில் Flu காய்ச்சலுக்கான தடுப்பூசி, கோழி முட்டைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதே பாணியில், கொரோனா வைரஸூக்கு எதிராக ஒரு புதிய தடுப்பூசி ஒன்றை, அமெரிக்காவின் ஐச்சன் மவுன்ட் சினாய் மருத்துவ கல்லூரி ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். எம்  ஆர்.என்.ஏ ரக தடுப்பூசிகளை தயாரிக்க தேவைப்படும் மிக அதிக குளிர் நிலை சூழல், இதற்கு தேவைப்படாது என்பதால், இதன் உற்பத்தி செலவு மிக மிக குறைவாக இருக்கும் என்கின்றனர். கோழி முட்டையில் இருந்து உருவாக்கப்படும் இந்த புதிய ரக கொரோனா தடுப்பூசி, மிகச் சிறந்த பலன்களை அளிப்பதாக முதல் கட்ட சோதனைகள் கூறுகின்றன. எதிர்காலத்தில் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் இதை மிகக் குறைந்த செலவில், மிக எளிதாக தயாரிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   …

The post கோழி முட்டையில் இருந்து கோவிட் தடுப்பூசி: ஐச்சன் மவுன்ட் சினாய் மருத்துவக் கல்லூரியில் அமெரிக்க விஞ்ஞானிகள் குழுவின் புதிய முயற்சி appeared first on Dinakaran.

Tags : Aichen Mount Sinai College of Medicine ,New York ,New York City ,Aichen Mount Sinai Medical College ,
× RELATED உலக கோப்பையில் விளையாட இந்திய அணி வீரர்கள் நியூயார்க் புறப்பட்டனர்