×

5வது முறையாக இந்தியா சாம்பியன்

ஆன்டிகுவா: ஐசிசி யு19 உலக கோப்பை பைனலில் இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி, 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. நார்த் சவுண்ட், விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இங்கிலாந்து 44.5 ஓவரில் 189 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தாமஸ் 27, ஜேம்ஸ் கென்னத் 95, ஜேம்ஸ் சேல்ஸ் 34* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இந்திய பந்துவீச்சில் ராஜ் பாவா 5, ரவி குமார் 4, கவுஷல் 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய இந்தியா 47.4 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்து வென்று 5வது முறையாக இளைஞர் உலக கோப்பையை முத்தமிட்டது. ரகுவன்ஷி 0, ஹர்னூர் 21, ஷேக் ரஷீத் 50, கேப்டன் யஷ் துல் 17, ராஜ் பாவா 35, கவுஷல் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர். நிஷாந்த் சிந்து 50 ரன், தினேஷ் பனா 13 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் பாய்டன், சேல்ஸ், ஆஸ்பின்வால் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.இந்திய வீரர் ராஜ் பாவா ஆட்ட நாயகன் விருதும், தென் ஆப்ரிக்காவின் டிவால்ட் புரூவிஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர். யு19 உலக கோப்பையை 5வது முறையாக கைப்பற்றியுள்ள இந்திய அணி வீரர்கள் வாழ்த்து மழையில் நனைந்து வருகின்றனர். இதற்கு முன்பாக, 2000வது ஆண்டில் முகமது கைப் தலைமையிலும், 2008ல் விராத் கோஹ்லி, 2012ல் உன்முக்த் சந்த், 2018ல் பிரித்வி ஷா தலைமையில் இந்திய யு19 அணி உலக கோப்பையை வென்றுள்ளது.முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து: ஐசிசி யு19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: ஐசிசி யு19 உலகக் கோப்பையை 5வது முறையாக வென்ற யஷ் துல் தலைமையிலான இந்திய அணிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் 1,000 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் அணி என்ற பெருமையை பெற்ற இந்திய ஆண்கள் சீனியர் அணிக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, சச்சின் உள்ளிட்ட முன்னாள் நட்சத்திரங்கள் மற்றும் பல பிரபலங்கள் சாதனை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.தலா ரூ.40 லட்சம்: இளைஞர் உலக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ள இந்திய யு19 அணி வீரர்களுக்கு தலா ₹40 லட்சம் மற்றும் அணி ஊழியர்களுக்கு தலா ₹25 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று பிசிசிஐ செயலர் ஜெய் ஷா அறிவித்துள்ளார்….

The post 5வது முறையாக இந்தியா சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : India ,Antigua ,England ,ICC U19 World Cup Final ,Dinakaran ,
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...