×

பேட்மின்டன் வீராங்கனை குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட விவகாரம்; மன்னிப்பு கூறியதை சுட்டிக்காட்டி நடிகர் சித்தார்த் வாக்குமூலம்: வீடியோ கான்பரன்சிங் மூலம் போலீசார் விசாரணை

சென்னை: நட்சத்திர பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் தனியார் தொலைக்காட்சியை சேர்ந்த பெண் தொகுப்பாளரின் டிவிட்டர் பதிவுக்கு சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்ட நடிகர் சித்தார்த் மீது விமர்சனங்கள் எழுந்தது. இதையடுத்து தன்னுடைய டிவிட்டர் பதிவை நீக்கி நடிகர் சித்தார்த் தனது பதிவுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கோரியிருந்தார். ஆனாலும் இந்த விவகாரத்தில் நடிகர் சித்தார்த் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க என்று தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல்துறைக்கு பரிந்துரை செய்தது. இதையடுத்து சென்னை காவல் துறை சார்பில் நடிகர் சித்தார்த்துக்கு சம்மன் அனுப்பப்பட்டது.இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நடிகர் சித்தார்த்திடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் சென்னை போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். நடிகர் சித்தார்த்திடம் பெறப்பட்ட வாக்குமூல ஆதாரங்களை தேசிய மகளிர் ஆணையத்துக்கு அனுப்பியுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையத்தின் அடுத்த கட்ட நகர்வை பொறுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்தனர்….

The post பேட்மின்டன் வீராங்கனை குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட விவகாரம்; மன்னிப்பு கூறியதை சுட்டிக்காட்டி நடிகர் சித்தார்த் வாக்குமூலம்: வீடியோ கான்பரன்சிங் மூலம் போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Siddharth ,Chennai ,Twitter ,Saina Naval ,
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...