×

வட்டார வளர்ச்சி அலுவலர் அதிரடி நாட்டார்மங்கலத்தில் ஆடிப்பெருக்கு மழை வேண்டி பக்தர்கள் கரகம் எடுத்து வழிபாடு

 

பாடாலூர், ஆக. 4: ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு விவசாயம் செழிக்க போதிய மழை பெய்ய வேண்டி நேற்று கரகம் எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா நாட்டார்மங்கலம் கிராமத்தில் ஆடிப் பெருக்கு தினத்தை முன்னிட்டு விவசாயம் செழிக்க போதிய மழை பெய்ய வேண்டி நேற்று கரகம் எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நாட்டார்மங்கலம் பெருமாள் கோயிலில் இருந்து பக்தர்கள் கரகத்தை
தலையில் சுமந்தபடி செட்டிகுளம் தண்டாயுதபாணி கோயிலின் மலைஅடிவாரத்தில் உள்ள பஞ்சநதி தெப்பக்குளத்துக்கு வந்து சேர்ந்தனர். பின்னர் பக்தர்கள் குளத்தில் புனித நீராடி விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேகம் ஆராதனையில் கலந்து கொண்டனர். பின்னர், பக்தர்கள் கரகத்தை தலையில் சுமந்தவாறு நாட்டார்மங்கலம் கிராமத்தில் முக்கிய வீதிகள் வழியாக சென்று செல்லியம்மன் கோயிலுக்கு வந்து சேர்ந்தனர்.

 

The post வட்டார வளர்ச்சி அலுவலர் அதிரடி நாட்டார்மங்கலத்தில் ஆடிப்பெருக்கு மழை வேண்டி பக்தர்கள் கரகம் எடுத்து வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Nattarmangalam ,Patalur ,Nattarmangalam village ,Alathur taluka ,Aattur taluka day ,Alathur taluka, ,Perambalur district… ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 49,548 வாக்காளர்கள் நீக்கம்