×

குளித்தலை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு திமுக தொண்டர் பலி

 

குளித்தலை, ஆக. 4: குளித்தலை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு திமுக தொண்டர் பலியானார்.
கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம் வாளாந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (46 ). இவர் கட்டிட கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர் அப்பகுதி கிளையில் திமுக உறுப்பினராக இருந்து பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஜானகி, வாளாந்தூர் கிளை மகளிர் அணி செயலாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கொத்தனார் ராஜ்குமார் நேற்று முன்தினம் நள்ளிரவு குளித்தலை ரயில் நிலையத்திற்கும் மருதூர் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நள்ளிரவு வேளையில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார்.
எதிர்பாராத விதமாக அவ்வழியாக சென்ற ரயில் மோதி சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் பலியானார்.

 

The post குளித்தலை ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு திமுக தொண்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Kulithalai railway station ,Kulithalai ,DMK ,Rajkumar ,Valandur ,Karur district ,Dinakaran ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...