×

சாத்தங்கோடு அரசு பள்ளியில் உலக நண்பர்கள் தின கொண்டாட்டம்

 

நித்திரவிளை, ஆக. 4: தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 குழுக்களாக பிரித்து செயல்பட அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு ஆசிரியர் தலைவர் மற்றும் 2 மாணவர் தலைவர்களை நிர்ணயம் செய்து மகிழ் முற்றம் என பெயரிடப்பட்டுள்ளது.
இதில் வருகின்ற ஒவ்வொரு பிரிவினரையும் அறிமுகப்படுத்தும் விதமாகவும், உலக நண்பர்கள் தினத்தை முன்னிட்டும் சாத்தங்கோடு அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் தாங்கள் கொண்டு வந்த சிற்றுண்டிகளை ஒன்று சேர்த்து அனைவரும் குழுக்களாக அமர்ந்து பகிர்ந்து சாப்பிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் பால் விக்டர், பட்டதாரி ஆசிரியர்கள் ஜார்ஜ், உஷாராணி, இடைநிலை ஆசிரியர்கள் ராஜம், பத்மஜா, லலிதா மற்றும் சந்திர ஷீலா, இந்து, வனஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

The post சாத்தங்கோடு அரசு பள்ளியில் உலக நண்பர்கள் தின கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : World Friends Day ,Satangadu Government ,School ,Nightingale ,Aga ,Tamil Nadu Government's Department of Education ,Karenji ,Mulla ,Marudam ,Naythal ,Milk ,World Friends Day Celebration ,Satangod Government School ,
× RELATED தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அழைப்பு...