சேலம்: கன்னியாகுமரி-திப்ரூக்கர் இடையே செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் (22503), நேற்று முன்தினம் மாலை 5.25 மணிக்கு கன்னியாகுமரியில் புறப்பட்டு, சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று காலை 6.47 மணிக்கு வந்து சேர்ந்தது. பிளாட்பார்ம் 5ல் நின்றதும் பயணிகள் ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது, பி-6 ஏசி பெட்டி பகுதிக்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென தனது கையால் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். இதில் 5க்கும் அதிகமான கண்ணாடிகள் உடைந்தன. அந்த வாலிபரை சக பயணிகள் மடக்கி பிடித்தனர்.
கண்ணாடி குத்தி கிழித்ததில் அவரது கையில் ரத்த காயம் ஏற்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வந்து, பீகார் மாநிலம் ராமிவஞ்ச் பகுதியை சேர்ந்த கௌரவ்குமார் (22) என்ற அந்த வாலிபரை மீட்டு விசாரித்தனர். காதல் விவகாரத்தில் சற்று மனநிலை பாதிக்கப்பட்ட அவர், இந்த ெசயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இச்சம்பவத்தால் சுமார் 1 மணி நேரம் தாமதமாக காலை 7.39 மணிக்கு ரயில் அங்கிருந்து புறப்பட்டது.
The post விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் கண்ணாடிகள் உடைப்பு: வாலிபர் சிக்கினார் appeared first on Dinakaran.
