×

தன்மான உணர்வை விதைத்த வீர பெருஞ்சுடர் தீரன் சின்னமலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை: தன்மான உணர்வை இம்மண்ணில் விதைத்துச் சென்ற வீரப் பெருஞ்சுடர் தீரன் சின்னமலை என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:
எத்தனை நாள் வாழ்ந்தோம் என்பதைவிட எப்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம் என ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்திய ஓடாநிலைக் கோட்டையின் ஒப்பற்ற விடுதலைப் போராளி தீரன் சின்னமலையின் நினைவு நாள்! சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே தோன்றி, நம் உரிமைகளில் எவர் கை வைத்தாலும் வெகுண்டெழுவோம் என்ற தன்மான உணர்வை இம்மண்ணில் விதைத்துச் சென்ற வீரப் பெருஞ்சுடரான தீரன் சின்னமலை புகழ் ஓங்குக. இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.

The post தன்மான உணர்வை விதைத்த வீர பெருஞ்சுடர் தீரன் சின்னமலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,Perunjudar Thiran Chinnamalai ,Chennai ,British ,
× RELATED இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி:...