குன்னூர், ஆக.3: தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் திமுக சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற முன்னெடுப்பில் அதிகமான மக்களை இணைத்து மாபெரும் வெற்றி அடைந்து வருவதற்கு காரணமான திமுக நிர்வாகிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
அதன்படி, நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சிக்குட்பட்ட 26வது வார்டு பகுதியான மிஷின் ஹில், வி.பி தெரு பகுதியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பத்மநாபன் தலைமையில் திமுக இளைஞரணியை சேர்ந்த நிர்வாகிகளுடன் கிளை செயலாளர் சண்முகம், ஆறுமுகம், பாலச்சந்தர், தினேஷ்குமார் ஆகியோர் உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கை தீவிரம் appeared first on Dinakaran.
