×

மாறுபட்ட காலநிலையால் தேயிலை, காய்கறிகளை நோய் தாக்கும் அபாயம்

ஊட்டி, டிச.19: நீலகிரியில் நிலவும் மாறுபட்ட காலநிலையால் தேயிலை மற்றும் மலை காய்கறிகளை நோய் தாக்கும் அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர். நீலகிரியில் கடந்த வாரம் முதல் உறை பனி விழுந்து வருகிறது. இதனால் மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.மாறுபட்ட காலநிலையால் நேற்று முன்தினம் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வெயில்,மேக மூட்டம் மற்றும் சாரல் மழை காணப்பட்டது.

ஊட்டி, குன்னூர்,குந்தா போன்ற பகுதிகளில் நேற்று பகல் நேரங்களில் வெயில் அடித்த போதிலும், குளிர் நிலவியது. இந்த மாறுபட்ட கால நிலையால் தேயிலை செடிகளை கொப்பள நோய் தாக்கும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். அதேபோல், மலை காய்கறிகளையும் நோய் தாக்கும் அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.மேக மூட்டம் மற்றும் மழையால், உறைபனி விழுவதில் தடை ஏற்படுவதால் மீண்டும் திடீரென ஒரு நாள் உறைபனி கொட்டி விடுமோ என்ற அச்சத்திலும் விவசாயிகள் உள்ளனர்.அதேசமயம், ஊட்டியில் நேற்று பகல் நேரத்திலேயே காற்று வீசிய நிலையில்,வெயில் அடித்த போதிலும் குளிர் அதிகமாக இருந்தது.

இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகினர்.இதனால், அனைவரும் வெம்மை ஆடைகளுடன் வலம் வந்தனர்.ஊட்டி படகு இல்லம், பைக்காரா மற்றும் தொட்டபெட்டா போன்ற பகுதிகளில் குளிரின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

Tags : Nilgiris ,
× RELATED சீசன் சமயங்களில் நெரிசலை தவிர்க்க...