- ஆம் ஆத்மி கட்சி
- மாநிலத் தலைவர் வசீகரன்
- சென்னை
- கல்மண்டபம் சாலை, கிழக்கு, ராயபுரம், சென்னை
- வடக்கு சென்னை மாவட்டம்
- முகமது பாரூக்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பங்கஜ் சிங்
- தின மலர்

சென்னை: சென்னை ராயபுரம் கிழக்கு கல்மண்டபம் சாலையில், ஆம் ஆத்மி கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. கட்சியின் வடசென்னை மாவட்ட செயலாளர் முகமது பாரூக் தலைமை வகித்தார். மாநில தலைவர் வசீகரன் முன்னிலை வகித்தார். இதில், தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் பங்கஜ்சிங் பேசுகையில், இந்தியா முழுவதும் பரவியுள்ள ஆம் ஆத்மி கட்சி, தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது,’ என்றார்.
மாநில தலைவர் வசீகரன் பேசுகையில், ‘‘ஊழலை ஒழிக்க கட்சி உருவாக்கி ஒரே ஆண்டில் டெல்லியில் ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி. இதுவரை பாஜவால் அசைத்து பார்க்க முடியாத கட்சியாக ஆம் ஆத்மி இருந்து வருகிறது. தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளோம். இவ்வாறு கூறினார்.
The post 234 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி: மாநில தலைவர் வசீகரன் அறிவிப்பு appeared first on Dinakaran.
