சென்னை: திமுக இளைஞர் அணி துணை செயலாளர்களுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.திமுக இளைஞர் அணி செயலாளரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நேற்று திமுக இளைஞர் அணியின் மாநில துணைச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மண்டல வாரியாக நடந்து வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், கிளை-வார்டு-பாகங்களுக்கு நிர்வாகிகளை நியமிப்பது, தொகுதி தோறும் கலைஞர் நூலகங்களை விரைந்து திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
மேலும், சட்டமன்றத் தொகுதிவாரியாக பாக இளைஞர்களுக்கு சமூக வலைதளப் பயிற்சியளிப்பது, சமூக வலைதள துணை அமைப்பாளர் நேர்காணலை மேற்கொள்வது, திமுக இளம் பேச்சாளர்களுக்கு பயிற்சியளிப்பது, புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களில் நிர்வாகிகளை நியமிப்பது உள்ளிட்ட திமுக இளைஞர் அணியின் ஆக்கப்பணிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
The post திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை appeared first on Dinakaran.
