×

புதுகைக்கு ஜன.9ல் மோடி வருகை; பொருநை அருங்காட்சியகம் முதல்வர் திறந்தது மகிழ்ச்சி: நயினார் நாகேந்திரன் பேட்டி

நெல்லை: பொருநை அருங்காட்சியகம் முதல்வர் திறந்தது மகிழ்ச்சி என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லை கரையிருப்பு பகுதியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ அளித்த பேட்டி: நூறு நாள் வேலை உறுதி திட்டத்தை ஏழைகளின் வாழ்வாதாரம் காக்க வேண்டி சீரமைத்து 125 நாட்களாக உயர்த்தி பிரதமர் மோடி அறிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் முதல்வர் பொருநை அருங்காட்சியகத்தை துவக்கி வைத்தது நல்ல செய்திதான் மகிழ்ச்சி.

ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே இப்பகுதியை ஆய்வு செய்து ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்வதற்காக பல திட்டங்களை முன்னெடுத்துள்ளார். தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணத்தின் நிறைவு விழா ஜன.9-ம் தேதி புதுக்கோட்டையில் நடக்கிறது. நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Modi ,Pudukkottai ,Chief Minister ,Porunai Museum ,Nainar Nagendran ,Nellai ,BJP ,president ,MLA ,Karaiyarippu ,
× RELATED ஒரு கோடி வாக்குகள் நீக்கம் மோடி அரசின்...