திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வசூல் எண்ணும் பணி நேற்று முன்தினம் கோயில் மண்டபத்தில் நடந்தது. இதில் 3 கோடியே 84 லட்சத்து 64 ஆயிரத்து 297 ரூபாயும், தங்கம் 1.53 கிலோ, வெள்ளி 22.5 கிலோ, பித்தளை 27.5 கிலோ, செம்பு 2.4 கிலோ, தகரம் 6.5 கிலோ மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 833ம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தது தெரியவந்தது.
The post திருச்செந்தூர் கோயில் உண்டியல் வசூல் ரூ.3.84 கோடி, 1.53 கிலோ தங்கம் appeared first on Dinakaran.
